விளையாட்டு
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃபெடரர், போட்ரோ அரையிறுதிக்கு தகுதி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃபெடரர், போட்ரோ அரையிறுதிக்கு தகுதி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், டெல் போட்ரோ ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
தொடரின் இரண்டாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், காலிறுதியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கட்டை தோற்கடித்தார். அரையிறுதியில் அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ உடன் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். டெல்போட்ரோ, காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் விக்டர் டிரோய்கியை 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
சீனாவில் நடைபெற்று வரும் இந்த ஷாங்க்யா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், மரின் சிலிச் ஆகியோர் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.