\
விம்பிள்டனில் 8வது முறையாக பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர்

விம்பிள்டனில் 8வது முறையாக பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர்

விம்பிள்டனில் 8வது முறையாக பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர்
Published on

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் 8ஆவது முறையாகப் பட்டம் வென்றார். 

தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆறாவது இடத்தில் இருக்கும் மரின் சிலிச்சை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர், 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார். இதன்மூலம் விம்பிள்டன் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்தார். இதுதவிர, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும். மேலும், விம்பிள்டன் தொடரில் 2012ம் ஆண்டுக்குப் பின்னர் ஃபெடரர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com