\
ஏடிபி டென்னிஸ்: வெற்றியுடன்  தொடங்கிய ஃபெடரர்

ஏடிபி டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர்

ஏடிபி டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர்
Published on

லண்டனில் நடைபெறும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரை அனுபவ வீரரான ரோஜர் ஃபெடரர் வெற்றியுடன் தொடக்கியுள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகரகாக கருதப்படும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும். தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பர். போரிஸ் பெக்கர் பெயரிலான பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து வீரர் ஃபெடரர் முதல் சுற்றில் அமெரிக்க வீரர் ஜாக் சாக்கை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை 6-4 என வென்ற ஃபெடரர், இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் அனுபவ வீரர் மரின் சிலிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார். போரிஸ் பெக்கர் பெயரிலான பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவும், குரேஷியாவின் மரின் சிலிச்சும் மோதினர். மூன்று செட்கள் நீடித்த போட்டியில் 6-4, 3-6, 6-4 என்ற கணக்கில் ஸ்வரேவ் வென்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com