விளையாட்டு
லெவர் கோப்பை டென்னிஸ் போட்டி: நடால்-ஃபெடரர் இணை வெற்றி
லெவர் கோப்பை டென்னிஸ் போட்டி: நடால்-ஃபெடரர் இணை வெற்றி
சர்வதேச டென்னிஸில் முதன்முறையாக இணைந்து விளையாடிய ஜாம்பவான் வீரர்களான ரபேல் நடாலும், ரோஜர் ஃபெடரரும் வெற்றியை ஈட்டினர்.
லெவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஐரோப்பிய அணிக்காக விளையாடிய வரும் அவர்கள், இரட்டையர் பிரிவில், உலக அணியைச் சேர்ந்த அமெரிக்காவின் ஜாக் சாக்-சாம் குவாரி இணையை எதிர்த்து விளையாடினர். இந்தப் போட்டியில் நடால்-ஃபெடரர் இணை 6-4, 1-6, 10-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செக் குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் ஐரோப்பிய அணி ஒன்பதுக்கு மூன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

