நடாலுடன் மோதும் பெடரர்... கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு?

நடாலுடன் மோதும் பெடரர்... கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு?

நடாலுடன் மோதும் பெடரர்... கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு?
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

உலகத் தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலிய ஓபனில் ஏற்கனவே 4 முறை பட்டம் வென்றுள்ளார். தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒருமுறை மட்டுமே வாகை சூடியுள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 23 போட்டிகளில் நடாலும், 11 போட்டிகளில் பெடரரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் 17 பட்டங்களையும், நடால் 14 பட்டங்களையும் இதுவரை வென்றுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் இவ்விருவரும் நேருக்கு நேர் மோதிய 8 ஆட்டங்களில், நடால் 6 முறையும், பெடரர் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2013 அமெரிக்க ஓபனுக்குப் பிறகு நடாலும், 2012 விம்பிள்டனுக்குப் பிறகு ஃபெடரரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. இதனால் 18ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரும், 15ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நோக்கில் நடாலும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com