விளையாட்டு
36 வயதில் முதலிடம்: தரவரிசையில் ஃபெடரர் சாதனை
36 வயதில் முதலிடம்: தரவரிசையில் ஃபெடரர் சாதனை
அதிக வயதில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் புதிய சாதனை படைத்துள்ளார்.
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் ரோட்டர்டாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், அவர் இந்தச் சாதனையை எட்டினார். காலிறுதியில் நெதர்லாந்தின் ராபின் ஹாசே உடன் ரோஜர் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 4-6 என இழந்த ஃபெடரர், அடுத்த இரண்டு செட்களை 6-1, 6-1 எனக் கைப்பற்றினார். அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் உலகத் தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்தார்.
அதிக வயதில் , தரவரிசையில் முதலிடம் பிடித்து வீரர் என்ற சாதனையை 36 வயதான ரோஜர் ஃபெடரர் நிகழ்த்தியுள்ளார். முன்னதாக கடந்த 2003ல் அமெரிக்காவின் ஆண்ட்ரே அகாசி, 33 வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்ததே சாதனையாக இருந்தது.

