”1155 நாட்கள்” முதலிடத்தில் இருந்த பாபர் அசாம்-க்கு எண்டு கார்டு போட்ட ரிஸ்வான்!

”1155 நாட்கள்” முதலிடத்தில் இருந்த பாபர் அசாம்-க்கு எண்டு கார்டு போட்ட ரிஸ்வான்!
”1155 நாட்கள்” முதலிடத்தில் இருந்த பாபர் அசாம்-க்கு எண்டு கார்டு போட்ட  ரிஸ்வான்!

டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் இடம் பிடித்துள்ளார். 

டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் இடம் பிடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார். பாபர் அசாம் மற்றும் மிஸ்பா-உல்-ஹக்கிற்குப் பிறகு டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மூன்றாவது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆவார்.

ஹாங்காங் மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் 78* மற்றும் 71 ரன்களை எடுத்ததன் மூலம் பாகிஸ்தானின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ரிஸ்வான். ஆசிய கோப்பையில் அசத்தலான ஃபார்மில் இருக்கும் ரிஸ்வான் 3 போட்டிகளில் 192 ரன்களை குவித்து முன்னணியில் உள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளார். முன்னதாக பாபர் அசாம் 1155 நாட்கள் (செப்டம்பர் 7, 2022 வரை) ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 3-வது இடத்திலும், இந்திய இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 14வது இடத்திலும, இஷான் கிஷன் 19வது இடத்திலும் உள்ளனர். ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் உள்ள மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில் வுட் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் ஷம்சி 2-வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 3வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com