ரிஷப் பண்ட் ரன் அவுட்.. யார் மீது தவறு? மல்லுக்கு நின்ற கமண்டேட்டார்கள்

ரிஷப் பண்ட் ரன் அவுட்.. யார் மீது தவறு? மல்லுக்கு நின்ற கமண்டேட்டார்கள்
ரிஷப் பண்ட் ரன் அவுட்.. யார் மீது தவறு? மல்லுக்கு நின்ற கமண்டேட்டார்கள்

ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீஸனின் 23 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி 184 ரன்களை குவித்தது. ஒப்பனர்கள் பிருத்வி ஷா மற்றும் தவான் நல்ல தொடக்கத்தை கொடுக்காமல் பெவிலியன் திரும்ப அதற்கடுத்து களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்டும் ரன் அவுட்டாகி ஏமாற்றியிருப்பார்கள். 

பண்ட் ரன் ஆன விதம் தற்போது பின்னர் பேசுபொருளானது. ஆட்டத்தின் 10 ஆவது ஓவரை திவேட்டியா வீசினார். ஸ்டொய்னிஸ், ரிஷப் பண்ட் அப்போது களத்தில் இருந்தனர். அந்த ஓவரை இரண்டாவது பந்தினை எதிர்கொண்ட  ஸ்டொய்னிஸ் ஸ்டோக் வைத்தார். இதனையடுத்து எதிர் முனையில் இருந்த பண்ட் வேகமாக ஓடி வந்தார். ஆனால், சில அடிகள் நகர்ந்த ஸ்டொய்னிஸ் அப்படியே நின்று கொண்டார். பாதிக்கு மேல் ஓடி வந்த பண்ட், ஸ்டொய்னிஸ் நின்றதை கவனித்துவிட்டு திரும்பவும் பின்னோக்கி ஓடினார். ஆனால், அதற்கு திவேட்டியாவால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அப்போது மேட்ச் கமண்டரி கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்கும், முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்னும் இந்த ரன் அவுட் தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கு நின்றனர்.

“ரிஷப் பண்ட் தனது பேட்டிங் பார்ட்னரின் அழைப்புக்கு ரெஸ்பாண்ட் செய்தார். அதில் அவரது தவறு எதுவும் இல்லை” என பண்ட்-க்கு ஆதரவாக முரளி கார்த்திக் சொல்லியிருந்தார்.

“அப்படியில்லை. உங்கள் விக்கெட்டிற்கு நீங்கள் தான் பொறுப்பு. அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என அந்த ரன் அவுட்டிற்கு காரணம் பண்ட் தான் என சொல்லியிருந்தார் பீட்டர்சன்.

கமண்டரி பாக்சில் கமண்டேட்டார்களின் மாறுபட்ட கருத்து அனலை கிளைப்பியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com