டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர வாய்ப்பு அதிகம் - காரணம் இதுதான்
ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் வாக்கில் துவங்க உள்ளன. இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர வாய்ப்பு அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த அணியை வழிநடத்தி வந்த ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக முதல் பாதி ஆட்டங்களில் இருந்து விலகி இருந்தார். அதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக அணியை வழிநடத்தினார். தற்போது ஷ்ரேயஸ், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில் பண்ட், டெல்லி அணியின் கேப்டனாக தொடர அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷ்ரேயஸ் விளையாட உடல் திறனுடன் இருந்தாலும் அவருக்கு கூடுதலாக சில அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பண்ட் அணியை வழிநடத்துவார் என அந்த அணியின் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது டெல்லி அணி தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அமீரகத்தில் செப்டம்பர் 22-ஆம் தேதி அன்று முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இதையும் வாசிக்கலாமே : குணமடையாத காயம்: ஐபிஎல் போட்டிகளில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

