டெல்லி அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் - 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய நபர்

டெல்லி அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் - 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய நபர்

டெல்லி அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் - 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய நபர்
Published on

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, நவி மும்பை மற்றும் புனே நகரில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. இதுவரை 33 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடந்த ஒருவாரகாலமாக சோதனை மேல் சோதனை காலமாக அமைந்துள்ளது. பயோபபுளையும் மீறி டெல்லி அணியில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதியான நிலையில், அடுத்தடுத்து 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக, கடந்த 18-ம் தேதி புனே செல்ல இருந்த டெல்லி அணி வீரர்களில், மிட்செல் மார்ஷ், டெல்லி அணியின் மருத்துவர், அந்த அணியின் சோஷியல் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, போட்டிக்கு முன்னதாக டிம் சீஃபர்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து ஐபிஎல் ரத்து செய்யப்படுமா என்ற அளவிற்கு சென்று இறுதியில் போட்டி நடைபெறும் இடம் மட்டும் மாற்றப்பட்டது.

முக்கிய வீரர்கள் இல்லாத போதும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில், 10.3 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து புள்ளிப்பட்டியலிலும் 6-வது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் குடும்பத்தினர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், ரிக்கி பாண்டிங்கும் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் அணியின் நலனை கணக்கிட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ரிக்கி பாண்டிங் தென்படவில்லை. டெல்லி அணி ஆட்டத்தின் போது, ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கள் தான் பெரும்பாலும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அவரும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com