உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அம்பயர்களின் பெயர்கள் அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அம்பயர்களின் பெயர்கள் அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அம்பயர்களின் பெயர்கள் அறிவிப்பு

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாத்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடக்கிறது. இதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பயோ பபுள் விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.விரைவில் இந்திய வீரர்கள் சவுத்தாம்டன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த இறுதிப் போட்டிக்கு களநடுவர்களாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த இரு நடுவர்களும் ஐசிசியின் எலைட் குழுவில் இருப்பவர்கள். இதில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் 53 டெஸ்ட் போட்டிகளிலும், மைக்கல் கோஃப் 19 டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள். மேலும் இந்தப் போட்டியின் ரெஃப்ரியாக கிறிஸ் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நடுவர்களை நியமிப்பதற்கு பதிலாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடுவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஐசிசி விளக்கமளித்துள்ளது. மேலும் ஆட்ட நடுவர்களும் பயோ பபுள் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com