சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பாகிஸ்தான் 'ஆல்-ரவுண்டர்' முகமது ஹபீஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பாகிஸ்தான் 'ஆல்-ரவுண்டர்' முகமது ஹபீஸ்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பாகிஸ்தான் 'ஆல்-ரவுண்டர்'  முகமது ஹபீஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு ஜிம்பாபே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான முகமது ஹபீஸ், இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளிலும், 218 ஒருநாள் போட்டிகளிலும், 115 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 3,652 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6,614 ரன்களும், டி-20 போட்டிகளில் 2,440 ரன்களும் அடித்துள்ள இவர், டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 139 விக்கெட்டும், டி-20 போட்டிகளில் 61 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்திருந்தாலும் பிரான்சைஸ் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com