உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு டென்மார்க் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு டென்மார்க் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு டென்மார்க் தகுதி
Published on

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு டென்மார்க் அணி தகுதி பெற்றுள்ளது. 

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நான்கு முறை உலகக்கோப்பையை கைப்பற்றிய இத்தாலி அணி தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது அதிர்ச்சி அளித்தது.

இந்தநிலையில்,உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு டென்மார்க் அணி தகுதி பெற்றுள்ளது. டப்லின் நகரில் நடந்த இரண்டாவது பிளே ஆஃப் சுற்றில் அயர்லாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வீழ்த்தியது. டென்மார்க் அணியில் கிறிஸ்டியன் எரிக்சன் ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ஐந்தாவது முறையாக டென்மார்க் அணி தகுதி பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com