\
RCB vs RR : பெங்களூருவுக்கு 178 ரன்கள் டார்கெட் செட் செய்த ராஜஸ்தான் 

RCB vs RR : பெங்களூருவுக்கு 178 ரன்கள் டார்கெட் செட் செய்த ராஜஸ்தான் 

RCB vs RR : பெங்களூருவுக்கு 178 ரன்கள் டார்கெட் செட் செய்த ராஜஸ்தான் 
Published on

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் 33வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றன. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ராஜஸ்தான் அணிக்காக ராபின் உத்தப்பாவும், பென் ஸ்டோக்ஸும் ஓப்பனிங் செய்தனர். 

உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

ஸ்டோக்ஸும், சஞ்சு சாம்சனும் பேட்டிங்கில் ஏமாற்ற கேப்டன் ஸ்மித் 36 பந்துகளில் 57 ரன்களை குவித்து அசத்தினார். 

பவர் பிளே ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை குவித்த ராஜஸ்தானின் ஆட்டதிற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக எட்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சஹால். மோரிஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது ராஜஸ்தான். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com