விளையாட்டு
ஃபார்முக்கு திரும்பிய கொல்கத்தா... வெற்றியை தக்க வைக்குமா கோலி படை?
ஃபார்முக்கு திரும்பிய கொல்கத்தா... வெற்றியை தக்க வைக்குமா கோலி படை?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இரு அணிகளும் வலுவான ஃபார்மில் உள்ளதால் வெற்றிப்பாதையில் தொடரும் முனைப்பில் ஆயத்தமாகி வருகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பெங்களூரு அணி 10 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.