கொல்கத்தா பந்துவீச்சு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூர் அணி?

கொல்கத்தா பந்துவீச்சு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூர் அணி?

கொல்கத்தா பந்துவீச்சு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூர் அணி?
Published on

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

12வது ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 17வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். கொல்கத்தா அணியில் நிகில் நாயக்கிற்கு பதிலாக சுனில் நரைன் மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல், பெங்களூர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹெட்மயருக்கு பதிலாக திம் சவுத்தி சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவிற்கு பதிலாக பவன் நெகி விளையாடுகிறார். 

இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் வென்று பெங்களூர் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.

இரு அணிகளும் மொத்தம் 23 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. பெங்களூர் அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com