மளமளவென விக்கெட்டுகள் சரிந்த போதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 173 ரன்களை குவித்த ஆர்சிபி!

மளமளவென விக்கெட்டுகள் சரிந்த போதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 173 ரன்களை குவித்த ஆர்சிபி!
மளமளவென விக்கெட்டுகள் சரிந்த போதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 173 ரன்களை குவித்த ஆர்சிபி!

மளமளவென விக்கெட்டுகள் சரிந்த போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக 173 ரன்களை குவித்த ஆர்சிபி அணி!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூரு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி தரப்பில் டு பிளசிஸ் மற்றுக் கோலி ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினார். முகேஷ் சவுத்ரியின் முதல் ஓவரில் பவுண்டரி விளாசிய கோலி, சிம்ரஜித் சிங் ஓவரிலும் அதே அதிரடியை தொடர்ந்தார். டு பிளசிஸ் தன் பங்குக்கு அதிரடியை துவக்கியதால் ஸ்கொர் விறுவிறுவென உயரத் துவங்கியது.

முதல் 5 ஓவர்களில் 50 ரன் விளாசல்:

5 ஓவர்களில் 50 ரன்களை அதிரடியாக கடந்தது ஆர்சிபி. அந்த அணிக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50ஐ கடந்தது. அடுத்த இரு ஓவர்களில் இருவரும் நிதானமாக விளையாட, மொயின் அலி வீசிய 8வது ஓவரில் அவுட்டாகி வெளியேறினார் டு பிளசிஸ். அடுத்து பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோலியுடன் இணை சேர்ந்தார் மேக்ஸ்வெல். ஆனால் 3 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் ரன் அவுட்டாக, ஆர்சிபி அணி தடுமாறத் துவங்கியது.

தொடரும் விராட் கோலியின் மோசமான பார்ம்:

அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் பொறுமையாக விளையாட, மொயின் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார் விராட் கோலி. 33 பந்துகளை சந்தித்து 30 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார் கோலி. நெருக்கடியான சூழலில் லோம்ரோருடன் கூட்டணி சேர்ந்தார் ரஜத் படிதார். இருவரும் பொறுப்பாக விளையாடி, ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினர். ஆனால் வெகு நேரம் இந்த கூட்டணி நீடிக்கவில்லை.

லட்டு கேட்சை தவறவிட்ட ஜடேஜா:

பிரட்டோரியஸ் பந்துவீச்சில் படிதர் அவுட்டாக, தினேஷ் கார்த்திக்குடன் கை கோர்த்தார் லோம்ரோர். பவுண்டரி, சிக்ஸர்களாக லோம்ரோர் வெளுத்துக் கட்ட, ஸ்கோர் மீண்டும் உயரத் துவங்கியது. லோம்ரோர் கொடுத்த ஒரு லட்டு மாதிரியான கேட்சை இந்த முறையும் மிஸ் செய்தார் ஜடேஜா. ஆனால் இன்னும் அதிக ரன்களை விளாசும் முன், அவரது விக்கெட்டை தீக்‌ஷனா வீழ்த்தியதால் ஜடேஜா தப்பித்தார். 27 பந்துகளை சந்தித்த லோம்ரோர் 42 ரன்களை குவித்து இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம்.

ரிவிவ்யூ வாய்ப்பை பயன்படுத்தி சிக்ஸர்கள் பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக்:

டெத் ஓவர்களில் களமிறங்கிய ஹசரங்கா, ஷபாஷ் அகமது ஆகியோர் பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்தியதால் ஆர்சிபியின் ரன்குவிப்பு வெகுவாக தடைபட்டுப் போனது. கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல் ரன் அவுட் ஆன போதிலும், கார்த்திக் இரு சிக்ஸர்கள் விளாசியதால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் தீக்சனா 3 விக்கெட்டுகளும், மொயின் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com