‘கோமாவில் இருந்தீங்களா’ ஆர்சிபி-யின் பேட்டிங்கை வறுத்தெடுத்த சேவாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் சேவாக் அவரது ‘Viru Ki Baithak’ சேனலில் இதனை தெரிவித்துள்ளார்.
“பெங்களூரு இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் அதிர்ச்சி அடைய வேண்டாம் என நான் இந்த போட்டிக்கு முன்பே சொல்லியிருந்தேன். ஆனால் அதை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஜோக் செய்கிறேன் என சொல்லி இருந்தீர்கள்.
ஆட்டத்தில் டாஸ் வென்ற அவர்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்கள். சுமாரான தொடக்கமும் கிடைத்தது. டிவில்லியர்ஸ், கோலி என இருவரும் ஏழாவது ஓவரிலிருந்தே ஒன்றாக விளையாடினர்.
இருப்பினும் 18வது ஓவர் வரை ஏதோ கோமோ நிலையில் இருந்து போலவே அவர்களது ஆட்டம் இருந்தது. அதை பார்த்த நான் குட்டி தூக்கமும் போட்டு எழுந்தேன். அப்போது கூட அவர்கள் அதே மாதிரி தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதே போல நேற்றைய ஆட்டத்தில் பச்சை நிற ஜெர்சியில் கோலி அணி விளையாடியது. அதை பாகிஸ்தான் என எண்ணி தோனி அந்த அணியை அடித்து நொறுக்கி விட்டார்” என சொல்லியுள்ளார்.
இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் கிளாஸான இன்னிங்ஸ் சென்னையின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.