இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பந்து வீசி னார். அது, விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக, போட்டி நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது பந்து வீச்சை 14 நாட்களுக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிடப்பட்டது.
ஆனால் அதன்படி ராயுடு தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தவில்லை. அவர் பரிசோதனை மையத்துக்கு செல்ல வில்லை.இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச, அவருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. அவர் பேட்ஸ்மேன் என்பதால், இதை கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.