இந்திய ஏ, பி அணிகள் அறிவிப்பு: அம்பத்தி ராயுடு மீண்டும் அவுட்!

இந்திய ஏ, பி அணிகள் அறிவிப்பு: அம்பத்தி ராயுடு மீண்டும் அவுட்!
இந்திய ஏ, பி அணிகள் அறிவிப்பு: அம்பத்தி ராயுடு மீண்டும் அவுட்!

இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள இந்திய ஏ, இந்திய பி மற்றும் ரெட், கிரீன் அணிகளுக்கான வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு மீண்டும் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். அதன்பிறகு இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.

இதையடுத்து இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதே போல ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் நடந்தது.

 இதில் அம்பத்தி ராயுடு தேர்வு பெறவில்லை. ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதில் ராயுடு தோல்வி அடைந்தார் . இரண்டு வருடங்களுக்கு பிறகு அணியில் வாய்ப்புக் கிடைத்தும் யோ யோ டெஸ்ட், அந்த வாய்ப்பை ராயுடுவிடம் இருந்து பறித்து விட்டது. சிறப்பான ஃபார்மில் இருந்தும் ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தனர்.

இந்நிலையில் இந்திய ஏ, இந்திய பி, இந்திய ரெட், கிரீன், புளு அணிகளுக்கான வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் எதிலும் அம்பத்தி ராயுடு பெயர் இடம்பெறவில்லை. அணியில் இருந்து அவர் மீண்டும் அவுட் ஆகியுள்ளார்.

இதுபற்றி விசாரித்தபோது, ‘பிட்னஸ் தேர்வில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. கடந்த மாதம் 15-ம் தேதி நடந்த யோ- யோ டெஸ்ட்டில் ராயுடு தேர்வு பெறவில்லை. ஆறு வாரத்துக்குள் மீண்டும் இந்த தேர்வுக்கு வர அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர் இன் னும் அதிக நாட்கள் வேண்டும் என்றார். இரண்டு வாரம் அதிகமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எப்போது யோ யோ உடல் தகுதித் தேர் வில் வெற்றி பெறுகிறாரோ, அதற்கு பின் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். இரண்டு வாரத்துக்குள் அவர் இதில் தேர்வு பெற்றால், செப்டம் பரில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் அவர் கலந்துகொள்வார்’ என்று தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com