மானம் காத்தார் ராயுடு, மிரட்டினார் பாண்ட்யா: நியூசி.க்கு 253 ரன் வெற்றி இலக்கு!

மானம் காத்தார் ராயுடு, மிரட்டினார் பாண்ட்யா: நியூசி.க்கு 253 ரன் வெற்றி இலக்கு!

மானம் காத்தார் ராயுடு, மிரட்டினார் பாண்ட்யா: நியூசி.க்கு 253 ரன் வெற்றி இலக்கு!
Published on

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அம்பத்தி ராயுடு, ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 252 ரன்களை எடுத்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மாவும், தவானும் களமிறங் கினர். கடந்த போட்டியை போலவே, இன்றைய போட்டியிலும் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. டிரென்ட் போல்ட்டும் மேட் ஹென்றியும் மிரட்டினர். நான்காவது ஓவரில் ரோகித் சர்மாவை போல்டாக்கினார் ஹென்றி. அவர் 2 ரன்னில் வெளியேற, அடுத்து தவானைத் தூக்கினார் போல்ட். அவர் 6 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.

அடுத்து வந்த சுப்மான் கில் 7 ரன் எடுத்திருந்தபோது, ஹென்றி பந்துவீச்சில் சட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி, 7 ஓவர்களில் 17 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இதையடுத்து, கடந்த 2 போட்டிகளில் விளையாடாத அனுபவ வீரர் தோனி, ராயுடுவுடன் இணைந்தார். நின்று காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தோனி ஒரு ரன்னில் நடையை கட்ட, இந்திய அணி, மீண்டும் தடுமாறியது. 

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் ராயுடுவும் தமிழக வீரர் விஜய் சங்கரும் பொறுமையாக வந்த பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விஜய் சங்கர், ரன் அவுட் ஆனார். அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து கேதர் ஜாதவ் வந்தார். ராயுடு பொறுமை காத்தாலும் பவுண் டரிகளுக்கு பந்தை விரட்டவும் தவறவில்லை.

இந்நிலையில் 43.2 ஓவரில் ஹென்றி வீசிய பந்தை, சிக்சருக்குத் தூக்கினார் ராயுடு. ஆனால், எல்லை கோட்டின் அருகில் நின்ற முன்றோ, அதை லாவகமாக கேட்ச் ஆக்கினார். ராயுடு, 113 பந்துகளைச் சந்தித்து 4 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 90 ரன் விளாசினார். அப்போது 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 190 ரன் சேர்த்திருந்தது.

பின்னர் ஹர்திக் பாண்ட்யா, வந்தார். அவரும் கேதர் ஜாதவும் இணைந்து ஆட்டத்தை தொடர்ந்தனர். 46 வது ஓவரில் ஹென்றி வீசிய பந்தில் போல்டானார், ஜாதவ். அவர் 45 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 34 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார் ஹர்திக் பாண்ட்யா. 47 வது ஓவரில், அஸ்லே வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு குஷி படுத்திய பாண்ட்யா, 49 வது ஒவரில் நீஷம் வீசிய பந்தில் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் 22 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன் விளாசினார். இறுதியில் இந்திய அணி 252 ரன்னுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டும், போல்ட் 3 விக்கெட்டும் நீஷம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 253 ரன் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சிறிது நேரத்தில் நியூசிலாந்து அணி, விளையாடத் தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com