ராயுடுவை பார்த்தால் அப்படி தெரியாது: என்ன சொல்கிறார் தல தோனி?

ராயுடுவை பார்த்தால் அப்படி தெரியாது: என்ன சொல்கிறார் தல தோனி?

ராயுடுவை பார்த்தால் அப்படி தெரியாது: என்ன சொல்கிறார் தல தோனி?
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்று பிளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

புனேவில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதரபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. தவான் 49 பந்துகளில் 79 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 39 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 

180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு வாட்சன், அம்பத்தி ராயுடு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர். வாட்சன் 57 ரன்களிலும், ரெய்னா 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய ராயுடு 62 பந்துகளில் அபார சதமடித்தார். இதையடுத்து 19 ஓவர்களிலேயே வெற்றியை எட்டியது சிஎஸ்கே. ராயுடு 100 ரன்களுடனும், கேப்டன் தோனி ‌20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ராயுடுவுக்கு இது முதல் ஐபிஎல் சதம். இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 4 வது சதம் இது. சென்னை அணியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வாட்சன் ஏற்கனவே சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் போட்டியின் மூலம் இரண்டாது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 

போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘ இந்த பிட்ச்சில் இரண்டாம் பாதியில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஆகாதது ஆச்சரியமாக இருந்தது. வாட்சனும் ராயுடுவும் சிறப்பாக ஆடினார்கள். வாய்ப்புக் கிடைத்தபோது பவுண்டரிகளாக விளாசினார்கள். இல்லை என்றால் ஐதராபாத் அணி நிர்ணயித்த 180 ரன்னை சேஸ் செய்வது கடினமாகி இருக்கும்.

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அணியில், ராயுடுவுக்கு இடத்தை ஒதுக்கிவிட்டேன். ஏனென்றால் அவர் திறமை மீது உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன். வேகப்பந்துவீச்சு, ஸ்பின் இரண்டிலும் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். அவரைப் பார்த்தால் அதிரடி பேட்ஸ்மேன் மாதிரி தெரியாது. ஆனால் எப்போதும் சிறந்த ஷாட்களை ஆடக் கூடியவர் அவர். அதனால் கேதர் ஜாதவ் பிட்டாக இருந்தால், ராயுடுவை ஓபனிங்கில் இறக்க முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். ஜாதவ் நான்கு அல்லது ஐந்தாவது வீரராக களமிறங்க முடிவு செய்தோம்.
எதிர்பாராத விதமாக சென்னையில் நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினோம். அடுத்து புனே வந்துவிட்டோம். இங்கும் ரசிகர்கள் ஆதரவு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com