விளையாட்டு
6/2 என சரிந்த சிஎஸ்கே ..100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்ட ராயுடு + டுபிளசிஸ்
6/2 என சரிந்த சிஎஸ்கே ..100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்ட ராயுடு + டுபிளசிஸ்
மும்பை அணியுடனான ஆட்டத்தில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் சென்னை அணியை சரிவிலிருந்து மீட்கும் மீட்பர்களாக பேட்டிங்கில் கூட்டணி அமைத்து 100 ரன்களை கடந்துள்ளனர் ராயுடுவும், டுபிளசிஸும்.
வாட்சன் மற்றும் முரளி விஜய் ஏமாற்றம் கொடுக்க ராயுடு மும்பை பவுலர்களை ரெய்டு விட்டார்.
47 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் உட்பட 71 ரன்கள் எடுத்தார் ராயுடு. மறுமுனையில் டுபிளசிஸ் 37 பந்துகளில் 41 ரன்களை குவித்திருந்தார்.
இருவரும் இணைந்து 115 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனை உடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் மும்பை பவுலர்கள்.
இறுதியாக ராகுல் சஹார் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற ராயுடு, டுபிளசிஸ் கூட்டணி மிக முக்கிய அஸ்திவாரமாக கூட அமையலாம்.