ஜடேஜா, கில்,இஷாந்த்,அக்சர் : காயம்,ஃபிட்னெஸ் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரை மிஸ் செய்யலாம்!

ஜடேஜா, கில்,இஷாந்த்,அக்சர் : காயம்,ஃபிட்னெஸ் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரை மிஸ் செய்யலாம்!

ஜடேஜா, கில்,இஷாந்த்,அக்சர் : காயம்,ஃபிட்னெஸ் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரை மிஸ் செய்யலாம்!
Published on

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா, இளம் வீரர் ஷூப்மன் கில், அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் மற்றொரு ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் ஆகிய நால்வரும் காயம் மற்றும் உடற்தகுதி காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

அக்சர் மற்றும் ஜடேஜா என இருவரும் இந்த தொடரில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமையாது. ஏனெனில் இருவரும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டும் தான் இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.  

இஷாந்த் ஷர்மா மற்றும் ஷூப்மன் கில் ஃபிட்னெஸ் பிரச்சனையால் அணியில் இடம் பிடிக்காமல் போக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கில், காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர் முழுவதையும் மிஸ் செய்திருந்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com