இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது பெயரில் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
நியூயார்க்கை மையமாக கொண்ட எஸ்கேப் எக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மொபைல் ஆப் மூலம் ரசிகர்கள் இவரிடம் நேரடியாக உரையாடலாம்.
ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டில் செய்துள்ள சாதனைகள், அது தொடர்பான வீடியோ, போட்டிகள், ஜடேஜாவின் பதிவுகள் உள்ளிட்ட விஷயங்களை இந்த மொபைல் ஆப் கொண்டிருக்கும். ‘ஜடேஜாவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த மொபைல் ஆப் மூலம் அவர்கள் ஜடேஜாவிடம் நேரடியாக உரையாடலாம், கேள்வி கேட்கலாம். இதன் மூலம் அவருடன் நெருக்கமாகலாம்’ என்று இந்த ’மொபைல் ஆப்’-ஐ உருவாக்கியுள்ள சேபி ஷாபிரா கூறியுள்ளார்.
‘ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள நினைப்பவன் நான். அதற்கு இந்த மொபைல் ஆப் உதவும்’ என்றார் ரவீந்திர ஜடேஜா. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தனக்கென ஸ்பெஷல் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியிருப்பது இதுதான் முறை.