கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். ஜடேஜாவின் மனைவி ரீவபா. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தனது காரில் குழந்தையுடன் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கார், முன்னால் சென்றுகொண்டிருந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது. இதையடுத்து ரிவபா காரை விட்டு இறங்கி வந்தார். அப்போது சஞ்சய், ரிவபாவை கடுமையாகத் தாக்கினார். இதில் ரிவபா காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள், ரிவபாவை, சஞ்சயிடம் இருந்து மீட்டனர்.
தன்னை தாக்கிய சஞ்சய் அகிர் மீது ரிவபா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சஞ்சய் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஐதராபாத் அணியை மும்பையில் சந்திக்கிறது. இதற்காக ஜடேஜா மும்பையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.