கிப்ஸூக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அஸ்வின்..!

கிப்ஸூக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அஸ்வின்..!

கிப்ஸூக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அஸ்வின்..!
Published on

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸுக்கு இந்திய வீரர் அஸ்வின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு ஷூ விளம்பரத்தை பதிவிட்டிருந்தார். ஷூ குறித்து பெருமையாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பலரும் கமண்ட் செய்து இருந்தனர். ‘இந்த ஷூவை போட்ட பின்னராவது நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் என்று நம்புகிறேன்’ என கிப்ஸ் கலாய்த்து இருந்தார். இதற்கு ரிப்ளை செய்த அஸ்வின், ‘உங்களைப் போல் வேகமாக ஓடவில்லை என்றாலும், மேட்ச் பிக்ஸிங் செய்யாமல் உழைத்து உண்ணும் நெறி கொண்ட மனதால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்’ என்று பகிரங்கமாக விமர்சித்தார். மேட்ச் பிக்ஸிங்கை குறிப்பிட்டு அஸ்வின் பேசியது தன்னை காயப்படுத்திவிட்டதால், அந்த உரையாடலில் இருந்து விலகுவதாக கூறி கிப்ஸ் முடித்துக் கொண்டார். 

கிப்ஸின் பதிலை கண்ட அஸ்வின், தான் ஒரு ஜோக்காக தான் கூறினேன் என்று பதிலளித்தார். அஸ்வின் பேசியது சரியில்லை என அப்பொழுது ட்விட்டரில் பலரும் கமண்ட் செய்தனர். தொடக்கத்தில் கிப்ஸின் முதல் ட்விட்டை விமர்சித்துதான் ட்விட்கள் குவிந்தன. பின்னர், அஸ்வினின் ட்விட்டை பார்த்து பலரும் முகம் சுளித்தது போல் உணர்ந்து கலாய்த்து தள்ளிவிட்டார்கள். 

இத்தகைய சூழலி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிப்ஸிற்கு அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அஸ்வின் தெரிவித்த வாழ்த்துக்கும் கிப்ஸும் நன்றி தெரிவித்து ரிப்ளை செய்தார். அஸ்வின் கிப்ஸிற்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து பலரும் மீம்ஸ்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com