’அஸ்வினின் முக்கியத்துவம் இப்போது தெரியும்’

’அஸ்வினின் முக்கியத்துவம் இப்போது தெரியும்’

’அஸ்வினின் முக்கியத்துவம் இப்போது தெரியும்’
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினின் முக்கியத்துவம் இரண்டாவது இன்னிங்சில்  தெரியும் என்று இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் திலீப் தோஷி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் திலீப் தோஷி. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், 114 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது லண்டனின் வசிக்கும் தோஷி, ’அஸ்வின் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்’ என்று பாராட்டினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘அஸ்வின் இப்போது நன்றாக முதிர்ச்சி அடைந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். முன்பு அவர் இப்படி வீசவில்லை. இப்போது நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அவரது பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நடக்கும் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் அவரது முக்கியத்துவம் தெரிய வரும். குல்தீப் யாதவ் பற்றி கேட்கிறார்கள். அவருக்கு இன்னும் வயதிருக்கிறது.

இப்போது கற்றுக் கொண்டுதான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் அனுபவம் வேண்டும். அவர் பந்தை மெதுவாக வீசுகிறார். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு அவர் சரி. அதில் 4 மற்றும் 10 ஓவர்கள்தான் வீசுகிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அப்படியல்ல. ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசுபவர். அவர் ஸ்டம்புக்கு நேராக வீசுவார். அவருக்கு அதிகமாக எல்பிடபிள்யூ விக்கெட் கிடைக்கும். அடுத்தப் போட்டியில் அவர் ஆடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். விராத் கோலி பொறுப்போடு ஆடி, அணியை வழி நடத்திச் செல்கிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com