பேட்டிங் பயிற்சியாளராக சச்சின்.. ரவி சாஸ்திரி விருப்பம்

பேட்டிங் பயிற்சியாளராக சச்சின்.. ரவி சாஸ்திரி விருப்பம்

பேட்டிங் பயிற்சியாளராக சச்சின்.. ரவி சாஸ்திரி விருப்பம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்க தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிசிசிஐ பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா, தலைமை செயலதிகாரி ராகுல் ஜோரி, செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா இடுல்ஜி ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவிடம் ரவி சாஸ்திரி இந்த கோரிக்கையை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கும் சச்சின் டெண்டுல்கரை, இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்களின் போது மட்டும் பேட்டிங் பயிற்சியாளராக குறுகிய காலத்துக்கு நியமிக்க ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

ஆனால், ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இருக்கக் கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாக இருப்பதாக ரவி சாஸ்திரியிடம் சிறப்புக் குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். பயிற்சியாளர் பதவியை சச்சின் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். 
  
வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் ஆகியோரை பிசிசிஐ நியமித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர்களது நியமனங்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதேபோல துணைப் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் தொடருவார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com