சாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்

சாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்
சாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அண்மையில் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரித்திமான் சாஹாவை கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என புகழ்ந்திருந்தார். 

அண்மையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 45 பந்துகளில் 87 ரன்களை விளாசியிருந்தார் சாஹா.

இதனையடுத்து ரவி சாஸ்திரி இந்த ட்வீட்டை ட்வீட் செய்துள்ளார்.

அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியின் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

அதனால் தோனியின் தீவிர ரசிகர்கள் சிலர் ரவி சாஸ்திரிக்கு பதில் ட்வீட் போட்டு வருகின்றனர். 

ரசிகர்களின் சில ரியாக்ஷன் இங்கே...

‘சிறந்த கீப்பரா? முதலில் உங்களது கண்களை திறந்து பாருங்கள்’, ‘அப்போது தல தோனி எங்கே?’ எனக் கேட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com