ஆஸ்திரேலியா டூர்... ரோகித் சர்மா பெயர் ஏன் இல்லை ? ரவி சாஸ்திரி விளக்கம்

ஆஸ்திரேலியா டூர்... ரோகித் சர்மா பெயர் ஏன் இல்லை ? ரவி சாஸ்திரி விளக்கம்

ஆஸ்திரேலியா டூர்... ரோகித் சர்மா பெயர் ஏன் இல்லை ? ரவி சாஸ்திரி விளக்கம்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாததற்கான காரணத்தை தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அந்த அணிக்கு பொல்லார்டு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அதில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரோகித் சர்மா குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார் அதில் "அவர் காயமடைந்திருப்பதால் மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். எங்களால் அதில் தலையிட முடியாது. ரோகித் சர்மா குறித்த மருத்துவ அறிக்கை தேர்வுக் குழுவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் "எனக்கு தெரிந்ததெல்லாம் இப்போதைக்கு அவர் விளையாடமல் இருப்பதே நல்லது. அப்படி விளையாடினால் அந்தக் காயம் மேலும் பாதிப்பை உண்டாக்கும் என்பதுதான் காரணம். மற்றப்படி நான் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை. அதனால் இதற்கு மேல் இது குறித்து பேச முடியாது" என்றார் ரவி சாஸ்திரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com