இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு?

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு?

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு?
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, ரவி சாஸ்திரி இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து, அடுத்த மாதம் நடக்கும் வெஸ்ட் தொடருக்காக அவர்களின் பதவிகாலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது.

இதற்கிடையே, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆக வாய்ப்பிருப் பதாகத் தெரிகிறது.

பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com