இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல, இந்திய அணியின் பந்துவிச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் வரை இவர்கள் பதவி வகிப்பார்கள் என்று தெரிகிறது. முன்னதாக, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அந்த தகவலுக்கு பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி மறுப்புத் தெரிவித்திருந்தார். இதனால் குழப்பம் நிலவியது. கடைசியாக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.