விளையாட்டு
2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபாரம், நியூசி. தடுமாற்றம்
2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபாரம், நியூசி. தடுமாற்றம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராவல் 84 ரன்கள் எடுத்து கேப்ரியல் பந்தில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லாதம் 22 ரன்னிலும் கேப்டன் வில்லியம்சன் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது விக்கெட்டை கம்மின்ஸ் சாய்த்தார். அடுத்து ராஸ் டெய்லர் 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் விக்கெட்டை ரோச் எடுத்தார். நிக்கோல்ஸும் சாண்ட்னரும் ஆடிவருகின்றனர்.