\
ரன்வீர் சிங் வித் விவியன் ரிச்சர்டு - வைரல் புகைப்படம்

ரன்வீர் சிங் வித் விவியன் ரிச்சர்டு - வைரல் புகைப்படம்

ரன்வீர் சிங் வித் விவியன் ரிச்சர்டு - வைரல் புகைப்படம்
Published on

கிரிக்கெட் நட்சத்திர வீரர்களுடன் ரன்வீர் சிங் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ‘83’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 1983ஆம் ஆண்டு இந்திய உலகக் கோப்பை வென்றதை குறிக்கும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக ரன்வீர் சிங் இங்கிலாந்தில் படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்திற்காக அவர் லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் விளையாட்டின் முன்னாள் வீரர்கள் அங்கு வர்ணனையாளர்களாக உள்ளனர். 

இந்நிலையில் ரன்வீர் சிங் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவியன் ரிச்சர்டு ஆகியோரை சந்தித்துள்ளார். இந்தப் படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெறும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன. 

ஏற்கெனவே இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ட்ரெண்டானது. ரன்வீர் சிங்கின் ‘83’ திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com