வலைப்பயிற்சியின் போது மூச்சுத்திணறல்! 28 வயதில் வேகப்பந்துவீச்சாளர் மரணம்!

வலைப்பயிற்சியின் போது மூச்சுத்திணறல்! 28 வயதில் வேகப்பந்துவீச்சாளர் மரணம்!
வலைப்பயிற்சியின் போது மூச்சுத்திணறல்! 28 வயதில் வேகப்பந்துவீச்சாளர் மரணம்!

ரஞ்சிக்கோப்பை போட்டியின் வலைப்பயிற்சியின் போது 28 வயதான வேகப்பந்துவீச்சாளருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சிக்கோப்பையில் பங்குபெற்று விளையாடிவந்த இமாச்சல பிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் சர்மா, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இரங்கல் பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் ஷர்மா, கடைசியாக ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரை பரோடா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக வதோதராவிற்கு இமாச்சல் பிரதேச அணியுடன் சென்றிருந்தார். அப்போது டிசம்பர் 31ஆம் தேதியன்று நடந்த வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சகவீரர்களுடன் தெரிவித்திருக்கிறார். அதற்கு பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த சித்தார்த், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். ஹிமாச்சல் அணியின் ஸ்டார் பிளேயரான சித்தார்த் வெறும் 28 வயதில் உயிரிழந்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் ஹிமாச்சல் பிரதேசத்தின் ஸ்பின்னர் மயங்க் டாகர், "ஜனவரி 3 முதல் 6ஆம் தேதி வரையில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் பங்குபெற்று விளையாடினோம். அந்த போட்டிக்கு முந்தைய வலைப்பயிற்சியின் போது தான் இது நிகழ்ந்தது. அதற்கு பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து, நாங்கள் போட்டியில் பங்குபெற்றும். ஆனால் எங்கள் போட்டியின் போது கூட சித்தார்த்தின் உடல்நிலையில் நாங்கள் அக்கறைகொண்டிருந்தோம். தினமும் மருத்துவனைக்கு சென்று அவரை பார்த்துவிட்டு வந்து தான் விளையாடினோம். ஆனால் அடுத்த ஒடிஷாவிற்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக நாங்கள் செல்ல வேண்டியிருந்தது” என்று கூறினார்.

மேலும், ” சித்தார்த்திற்கு மூச்சுத்திணறல் தொடர்ந்து மோசமடைந்ததால், அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். விரைவில் சிகிச்சைப்பெற்று மீண்டுவந்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் அவரது உயிரிழப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, எங்கள் அணியின் மொத்த வீரர்களையும் இது பாதித்துள்ளது. அவர் எங்கள் எல்லோருடனும் எப்போதும் மிகுந்த நெருக்கத்தோடு இருப்பார். மற்றும் எங்கள் அணியில் முக்கியமான ஒரு வீரராக இருந்தார்” என்று வேதனையோடு கூறினார்.

2017 நவம்பரில் பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அறிமுகமானார் சித்தார்த். 6 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 6 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 2021-22 விஜய் ஹசாரே டிராபியில் கோப்பையை கைப்பற்றிய ஹிமாச்சல் பிரதேச அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இறுதிபோட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில், சித்தார்த் 10 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். வெற்றிக்கு பெரிதும் அச்சுறுத்தலாக சதமடித்து ஆடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் விக்கெட்டை கைப்பற்றிய சித்தார்த் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக அமைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com