ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் புஜாரா 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
மூன்றாவது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா. இன்றும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான சவால் அளித்து வருகிறார். ஆஸி. பந்துவீச்சாளர்களைச் சுலபமாக எதிர்கொண்ட அவர், தனது நேர்த்தியான ஆட்டத்தால் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். சிறப்பாக ஆடி வரும் புஜாரா 165 ரன்களை குவித்து விளையாடி வருகிறார். இந்த ரன்களுக்காக 435 பந்துகளை சந்தித்த அவர் 18 பவுண்டரிகள் விளாசியுள்ளார். புஜாராவுக்கு துணையாக சஹா விளையாடி வருகிறார். அவர் 63 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியைவிட, தற்போது 11 ரன்கள் பின் தங்கியுள்ளது.