பிரபல Youtuber speedக்கு RKO போட்ட ராண்டி ஆர்ட்டன்..!

ராண்டி ஆர்ட்டன் ஸ்பீடை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
Randy Orton | IShowSpeed
Randy Orton | IShowSpeedWrestleMania 40

ரெஸ்லமேனியா 40 சண்டைத் திருவிழாவில் பிரபல Youtuber ஸ்பீடுக்கு ராண்டி ஆர்ட்டன் RKO நாக் போட்டது இணையத்தில் வைரலாகிவருகிறது.

IShowSpeed என்னும் பெயரில் இயங்கும் டேரன் ஜேசன் வாட்கின்ஸ் உலக அளவில் பாப்புலரான யூடியூபர் .

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியைக்கான இந்தியா வந்தார் ஸ்பீட். அப்போது இந்திய அளவில் தலைப்புச் செய்தி ஆனார். மும்பையில் லேண்ட் ஆனது முதல் தனது வித்தியாசமான வீடியோக்களால் டிரெண்டிலேயே தொடர்ந்திருந்தார். Youtubeல் கிட்டத்தட்ட 2.4 கோடி சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் ஸ்பீடைக் காண இந்தியா முழுக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆட்டோவில் பயணம் செய்வது, செல்ஃபி எடுப்பது என இந்தியாவில் ஜாலியாக ரகளை செய்துகொண்டிருந்தார் ஸ்பீட்.

WWE United States Champion ஆன லோகன் பாலுடன் நேற்று WWE அரங்கிற்கு வந்தார் ஸ்பீட். இந்த சாம்பியன்ஷிப் போட்டி triple threat போட்டியாக நடைபெற்றது. லோகன் பால், ராண்டி ஆர்ட்டன், கெவின் ஓவன்ஸ் இந்த போட்டியில் பங்கேற்றார்கள். லோகன் பால் போட்டியில் வெற்றிபெற, அதற்குப் பின்னர் சும்மா இருந்தா ராண்டி ஆர்ட்டனை வம்பிழுத்தார் ஸ்பீட். குளிர்பான பாட்டில் உருவத்தில் வந்திருந்த ஸ்பீடை , ; இந்தா வாங்கிக்க' என RKO நாக் போட்டு காலி செய்தார் ராண்டி ஆர்ட்டன். ராண்டி ஆர்ட்டன் ஸ்பீடை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com