ராஞ்சியில் சாதிக்கக் காத்திருக்கும் ஆஸ்திரேலியா, முரளி விஜய்

ராஞ்சியில் சாதிக்கக் காத்திருக்கும் ஆஸ்திரேலியா, முரளி விஜய்

ராஞ்சியில் சாதிக்கக் காத்திருக்கும் ஆஸ்திரேலியா, முரளி விஜய்
Published on

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 16ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டி நடந்த புனே மைதானத்தின் ஆடுகளம் மோசமானது என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு மைதானம் சராசரிக்கும் கீழ் என்று ஐசிசி தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் ராஞ்சி மைதான ஆடுகளத்தின் மீதே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும், ஊடகங்களும் தீவிரமாக விவாதித்து வருகின்றன. கடந்த போட்டியின்போது ஏற்பட்ட டிஆர்எஸ் சர்ச்சையும் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், ராஞ்சியில் வெற்றிக்கொடி நாட்டி தொடரில் முன்னிலை பெற இரு அணிகளுமே முழு முயற்சி எடுக்கும்.

இதுதவிர, ராஞ்சியில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் 800ஆவது டெஸ்ட் போட்டியாகும். கடந்த 1877ல் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் பயணம் தற்போது இந்த மைல்கல்லை எட்டுகிறது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு அடுத்தபடியாக 800 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 2ஆவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெறும்.

காயத்தால் பெங்களூரு டெஸ்டில் பங்கேற்காத இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், ராஞ்சி போட்டியில் களமிறங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு களமிறங்கினால் முரளி விஜய்க்கு அது 50ஆவது டெஸ்ட் போட்டியாக அமையும். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள முரளி விஜய், 9 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களின் உதவியுடன் 3307 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்களை ராஞ்சி போட்டியில் கடப்பார் என்று கருதப்படுகிறது. இதுவரை 96 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஸ்மித், 4,924 ரன்கள் குவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com