\
மாணவர்கள் மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் கைது!

மாணவர்கள் மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் கைது!

மாணவர்கள் மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் கைது!
Published on

பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி வீரர், ரமித் ரம்புக்வெல்லா. இவர் இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லாவின் மகன். இலங்கை அணிக்காக இரண்டு சர்வதேச டி20 போட்டியில் இவர் விளையாடியுள்ளார். இவர் நாரஹேன்பிட் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேரை தாக்கியதாகவும் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காரணத்துக்காகவும் போதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காகவும் இவர் இப்போது கைது செய்யப்பட்டார்.

இவருக்கு சர்ச்சை ஒன்றும் புதிதில்லை. 2016-ம் ஆண்டு போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார். 2013-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு விளையாட சென்றபோது நடுவானில் பறந்து கொண்டிருந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானியின் அறையை கதவை போதையில் திறக்க முயன்றார். அப்போது இந்தப் பிரச்னை சர்ச்சையானது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com