மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்
Published on

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உயிரிழந்தார்.

லோக் ஜனசக்தி கட்சியை நிறுவி அதன் தலைவராக இருந்தார் ராம்விலாஸ் பஸ்வான். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஒரு மாத காலமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பீகாரைச் சேர்ந்த பஸ்வானுக்கு தற்போது 74 வயதாகிறது. இவர் 8 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடைசியாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com