“எங்கள் வழியில் வெற்றியை தொடங்கவேண்டும்” - விராட் கோலி

“எங்கள் வழியில் வெற்றியை தொடங்கவேண்டும்” - விராட் கோலி

“எங்கள் வழியில் வெற்றியை தொடங்கவேண்டும்” - விராட் கோலி
Published on

தங்கள் வழியில் வெற்றியை தொடங்கி, தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 14வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே கடந்த மூன்று போட்டிகளும் தோற்று, ஐபிஎல் தரவரிசை பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் பரிதாபமாக உள்ளன. எனவே இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. 

இந்தப் போட்டி தொடர்பாக பேசிய பெங்களூர் அணி கேப்டன் கோலி, “ஜெய்பூர் மைதனாம் நன்றாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரானது. நாங்கள் எங்கள் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினோமே அதேபோன்று ஒரு ஆட்டத்தை தான் விளையாடப்போகிறோம். இனியும் நாங்கள் ஆனந்தமாக செல்ல வேண்டுமென்றால், அடிப்படையான விஷயங்களை செய்ய வேண்டும். எங்கள் வழியில் முடிவை பெறுவதுடன், இந்தத் தொடரின் வெற்றியை தொடங்க வேண்டும். அடுத்த போட்டி கண்டிப்பாக எங்களுக்கான போட்டியாக இருக்கும்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com