விளையாட்டு
சிஎஸ்கேவின் வெற்றிக்காக பெரிய விசில் போடும் ராஜஸ்தான் ராயல்ஸ்
சிஎஸ்கேவின் வெற்றிக்காக பெரிய விசில் போடும் ராஜஸ்தான் ராயல்ஸ்
நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஆட்டங்கள் விளையாடி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது.
அதனால் புள்ளிப்பட்டியில் பின்தங்கியுள்ளதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறி உள்ளது.
இந்நிலையில் சென்னை அணி இந்த சீசனின் 13-வது ஆட்டத்தை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் இன்று விளையாட உள்ளது.
இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை தக்கவைத்து கொள்ளும். அதனால் இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற வேண்டுமென பெரிய விசில் போட்டுள்ளது ராஜஸ்தான்.
அதனை அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
அதற்கு சென்னை அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் ரிப்ளை கொடுத்துள்ளன.