சமபலத்துடன் மோதும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்- டாஸ் வென்றது யார்?

சமபலத்துடன் மோதும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்- டாஸ் வென்றது யார்?
சமபலத்துடன் மோதும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்- டாஸ் வென்றது யார்?

24-வது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த சீசனில் யாரும் எதிர்பாராதவகையில், ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, குஜராத் அணிகள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் 4-வது வெற்றியை குறிவைத்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 24-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து ஹ்ர்திக் பாண்ட்யா தலைமையிலலான குஜராத் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. லக்னோ, டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றை தொடர்ச்சியாக தோற்கடித்தது. ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. 

அதே நேரத்தில் நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில், 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 21 ரன்னிலும், லக்னோவை 3 ரன்னிலும் வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணியிடம் 4 விக்கெட்டில் தோற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். மேலும், இவ்விரு அணிகளும் முதல் முறையாக மோதுவதால் இந்தப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்:

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ஷுப்மான் கில் , விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது ஷமி

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்:

சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்) , ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர், வான் டெர் டூசன், ரியான் பராக், அஷ்வின், ஜேம்ஸ் நீஷம், யுஸ்வேந்திரா சாஹல், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com