பெங்களூர் அதிரடியை சமாளிக்குமா ராஜஸ்தான்? - டாஸ் வென்ற ஸ்மித் பேட்டிங் தேர்வு
பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 33 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. 8 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 5 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும், அதேபோல், 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 3 வெற்றிகளுடன் 7ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் பெங்களூர் அணியில் சிராக்-க்கு பதிலாக குர்கிரீத் சிங், ஷிவம் துபேவுக்கு பதில் ஷபாஷ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணிகள் விவரம்:
ராஜாஸ்தான் ராயல்ஸ்:-
ஜோஸ் பட்லர்
பென்ஸ் ஸ்டோக்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்
சஞ்சு சாம்சன்
ராபின் உத்தப்பா
ரியன் பரக்
ராகுல் திவாடியா
ஜோப்ரா ஆர்ச்சர்
ஷ்ரேயாஸ் கோபால்
ஜெய்தேவ் உனாகட்
பெங்களூரு அணி
தேவ்தத் படிக்கல்
ஆரோன் பின்ச்
விராட் கோலி
ஏபி ட்வில்லியர்ஸ்
குர்கீரட் சிங்
கிறிஸ் மோரிஸ்
வாஷிங்டன் சுந்தர்
இசுரு உடனா
நவ்தீவ் சைனி
ஷபாஷ் அகமது
யுஸ்வேந்திர சாஹல்