\
'மாலத்தீவுதான் சிறந்ததாக இருக்கும்" பும்ராவுக்கு ராஜஸ்தன் ராயல்ஸ் வித்தியாசமான வாழ்த்து!

'மாலத்தீவுதான் சிறந்ததாக இருக்கும்" பும்ராவுக்கு ராஜஸ்தன் ராயல்ஸ் வித்தியாசமான வாழ்த்து!

'மாலத்தீவுதான் சிறந்ததாக இருக்கும்" பும்ராவுக்கு ராஜஸ்தன் ராயல்ஸ் வித்தியாசமான வாழ்த்து!
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு திருமணம் நடந்தையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வித்தியாசமான வாழ்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடிக்கு நேற்று கோவாவில் திருமணம் முடிந்தது.

பிங்க் நிற உடையில் மணமகன் - மணமகள் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகாக.. கலர்ஃபுல்லாக ரசிக்க வைத்தது.

இந்தக் காதல் தம்பதியனருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘ஏப்ரல், மே மாதங்களில் மாலத்தீவுதான் சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்’ என்று நகைச்சுவையுடன் ஹனிமூன் செல்ல சிறந்த இடத்திற்கான அப்டேட்டும் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இந்திய பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக மாலத்தீவுக்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com