"ஓய்வு குறித்த தகவலை முறைப்படி சுரேஷ் ரெய்னா தெரிவிக்கவில்லை"- பிசிசிஐ !

"ஓய்வு குறித்த தகவலை முறைப்படி சுரேஷ் ரெய்னா தெரிவிக்கவில்லை"- பிசிசிஐ !

"ஓய்வு குறித்த தகவலை முறைப்படி சுரேஷ் ரெய்னா தெரிவிக்கவில்லை"- பிசிசிஐ !
Published on

ஓய்வுப் பெறுவது குறித்த தகவலை முன்கூட்டியே எங்களிடம் சுரேஷ் ரெய்னா தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே தானும் ஓய்வை அறிவித்தார் 33 வயதேயான சுரேஷ் ரெய்னா. இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,787 ரன்களை குவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டுகளிலும் சதமடித்தவர் சுரேஷ் ரெய்னா.

சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதில் "ஓய்வுப் பெறுவது குறித்த தகவலை முதலில் பிசிசிஐயிடம் வீரர்கள் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா வழக்கத்திற்கு மாறாக பொது வெளியில் அறிவித்த பிறகே பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். குறுகிய ஓவர் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்திறனை ரெய்னா வெளிப்படுத்தி, பல இக்கட்டான தருணங்களில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார்" என்றும் பாராட்டியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com