ரிங்கா ரிங்கா ரோஸஸ்: வைரலாகும் தோனி, ரெய்னா, ஹர்பஜன் குழந்தைகளின் மழலை ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த தோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோரின் பெண் குழந்தைகள் இணைந்து விளையாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தோனி, சுரேஷ் ரெய்னாவின் நட்பு எல்லோரும் அறிந்ததுதான். அந்த நட்பு வட்டத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் ஹர்பஜன் சிங். இவர்களைப் போலவே இவர்களின் பெண் குழந்தைகளும் நட்பாகி இருக்கிறார்கள். தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடியுள்ளனர். அவர்கள், Ringa ringa roses, Pocket full of poses, Hush-sha bush-sha, All fall down என்ற பாடலை மழலைக் குரலில் பாடி ஆடும் இந்த வீடியோ காட்சியை சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள் ளார். சுமார் 10 நொடிகள் கொண்ட இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மற்றொரு புகைப்படத்தையும் ரெய்னா வெளியிட்டுள்ளார். அதில், ரெய்னா மகளும் தோனி மகளும் ஆளுக்கொரு டேப்பை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு கீழே, கிரேஸியாவும் ஸிவாவும் சிஎஸ்கே அணியின் ஹைலைட்ஸை பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார் ரெய்னா. இந்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.