ரன் குவிக்கவில்லை என்பதால் அணியிலிருந்து நீக்குவதா? ராகுலுக்கு ஆதரவளித்த கவுதம் காம்பீர்!

ரன் குவிக்கவில்லை என்பதால் அணியிலிருந்து நீக்குவதா? ராகுலுக்கு ஆதரவளித்த கவுதம் காம்பீர்!
ரன் குவிக்கவில்லை என்பதால் அணியிலிருந்து நீக்குவதா? ராகுலுக்கு ஆதரவளித்த கவுதம் காம்பீர்!

”இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்டர் கே.எல்.ராகுல் ரன் எடுக்கவில்லை என்பதற்காக, அவரை அணியிலிருந்து நீக்கச் சொல்லக்கூடாது” என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள தேர்வு செய்யும் போட்டியாக இது கருதப்படுகிறது. இதனால், இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவமானதாக உள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 2 போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கே.எல்.ராகுல், கடந்த 2 போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. நாக்பூர் போட்டியில் 20 ரன்கள் (முதல் இன்னிங்ஸ்) எடுத்த அவர், டெல்லி போட்டியில் 17 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 1 (2வது இன்னிங்ஸ்) ரன்களில் வெளியேறினார். இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர், அவர் மீது கடும் விமர்சனம் வைத்து வருகின்றனர். இதற்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்திருந்தபோதும், நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து பதிலளித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், “கடந்த போட்டிகளில் ரன் எடுக்கவில்லை என்பதற்காக, இந்திய அணியில் இருந்து ராகுலை நீக்கக்கூடாது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் கேரியரில் சில இடங்களில் ரன் சேர்க்க தடுமாறுவார்கள். ராகுல் சிறப்பாக ஆடவில்லை என எந்தவொரு கிரிக்கெட் வல்லுனரோ அல்லது வேறு யாரேனும் ஒருவரோ சொல்லி, அவரை டிராப் செய்யக்கூடாது. திறமை கொண்ட வீரர்களை ஆதரிக்க வேண்டும். ரோகித் சர்மா, தனது கேரியரை தொடங்கிய விதத்தைப் பாருங்கள். அவர் லேட்டாகத்தான் ரன் குவிக்க தொடங்கினார். அவரது அப்போதைய, இப்போதைய ஆட்டத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்" என்றார்.

மேலும் "அவரது திறனை அறிந்து ஆதரித்தோம். இப்போது அபாரமாக ரன் குவித்து வருகிறார். அதை போலவே ராகுலும் விளையாடுவார், ரன் குவிப்பார். இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் அணியில் யாரையும் நீக்க வேண்டாம் என முடிவு செய்து, அணியின் செயல்பாட்டை ஊக்குவித்து வருகிறார்கள். இந்திய அணி நிர்வாகம் சரியான நேரத்தில் ராகுலை ஆதரித்து வருகிறது என கருதுகிறேன். ராகுல் சிறந்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ரன் சேர்த்துள்ளதை நாம் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியின் ஆலோசகராக காம்பீர் உள்ளார். இதே அணியின் கேப்டனாக கே.எல்ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com