‘தலைமைப் பயிற்சி பொறுப்பா? குடும்ப பொறுப்பா?’: திராவிட்டின் முடிவு குறித்து வினோத் ராய்

‘தலைமைப் பயிற்சி பொறுப்பா? குடும்ப பொறுப்பா?’: திராவிட்டின் முடிவு குறித்து வினோத் ராய்
‘தலைமைப் பயிற்சி பொறுப்பா? குடும்ப பொறுப்பா?’: திராவிட்டின் முடிவு குறித்து வினோத் ராய்

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட்டை நியமிப்பதே தங்களது விருப்பமாக இருந்தது என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

"ஸ்போர்ட்ஸ்கீடா" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள வினோத் ராய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் "ரவி சாஸ்திரிக்கு முன்பாக இந்திய அணிக்கு ராகுல் திராவிட்டைதான் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்ய தீர்மானித்தோம். ஆனால் அவர் தனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர்கள் இப்போதுதான் வளர்ந்து வருகிறார்கள். நான் இந்திய அணிக்காக பொறுப்பை ஏற்றால் உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும். என்னால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது என கூறினார். அது எங்களுக்கு நியாயமான கோரிக்கையாகவும் பட்டது. அதனால் அவர் கூறியதை ஏற்றுக்கொண்டாம்" என தெரிவித்துள்ளார்

லோதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்த வினோத் ராய் தலைமையில் நிர்வாகக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை களைந்து, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகக்குழுவின் வேலை. இந்த வேலை முடியும் வரை வினோத் ராய் குழுவுதான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்று இருந்தது.

2019 இல் மாரச் மாதம் 23- ஆம் தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இதனடிப்படையில் மாநில சங்கங்களுக்கு கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றன. .அக்டோபர் 23- ஆம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிந்த பின்னர் நிர்வாகக்குழு ராஜினாமா செய்தது. இதனால் 33 மாதங்களாக செயல்பட்டு வந்த நிர்வாகக்குழுவின் செயல்பாடு கடந்தாண்டுடன். முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com